சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் திவ்யா கணேஷ்

146

தமிழ் தொலைக்காட்சிகளில் இருந்து தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் பிரியா பவானி ஷங்கர். அவரை போலவே தற்போது திவ்யா கணேஷ் என்ற பிரபல சீரியல் நடிகை சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இதுவரை பல சீரியல்களில் நடித்துள்ள அவர் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படம் தான் இது.

தமிழ் பெண்ணான இவர் தெலுங்கிலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். தமிழில் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக அவர் கூறியுள்ளார்.

SHARE