சினிமாவில் 14 வருடம் நிறைவு செய்த சமந்தா! – நயன்தாரா போட்ட பதிவு

123

 

நடிகை சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

அவர் 2010ல் கௌதம் மேனனின் யே மாய சேசாவே படத்தின் மூலமாக அவர் அறிமுகம் ஆன நிலையில் தற்போது 14 வருடங்கள் நிறைவு அடைந்து இருக்கிறது.

தமிழில் அந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற பெயரில் வெளிவந்தது. யே மாய சேசாவே படத்தின் போது தான் சமந்தா நாக சைதன்யா உடன் காதலில் விழுந்து அதன் பின் சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கருத்து வேறுபாட்டால் அவர்கள் பிரிந்துவிட்டனர்.

நயன்தாரா போட்ட பதிவு
சமந்தா சினிமாவில் 14 வருடம் நிறைவு செய்திருப்பதற்கு நயன்தாரா வாழ்த்தி பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு நன்றி கூறி இருக்கும் சமந்தா, X தளத்தில் ட்ரெண்ட் செய்த ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

 

SHARE