சினிமா துறையில் இப்படியும் நடக்கிறதா?

141

நடிகர் ஆதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபலம். அவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த படம் மரகத நாணயம். அதன் பிறகு அவர் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.

அங்கு அவர் சில படங்களை வில்லன் வேடத்திலும் நடித்துள்ளார். இது பற்றி பேசியுள்ள அவர் “Sarrainodu படத்தில் வில்லனாக நடித்தது நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் வில்லன் ரோலில் நடிக்கச்சொல்லி பல்வேறு வாய்ப்புகள் வந்து குவிந்தது. முதலில் கேட்டனர், முடியாது என கூறினால் லஞ்சம் தரவும் முன்வந்தனர்” என கூறியுள்ளார்.

வில்லனாக நடிக்க லஞ்சம் தருகிறார்கள் என்கிற செய்தியே அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

SHARE