நடிகை நயன்தாரா தற்போது அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும் கோலமாவு கோகிலா, கொலையுதிர்காலம் என அவரின் நடிப்பில் பல படங்கள் தயாராகி வருகிறது.
அதோடு அவர் விரைவில் தன் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யப்போவதை மறைமுகமாக சொல்லிவிட்டார். இந்நேரத்தில் சினிமா ஸ்ட்ரைக் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.
புதிய படங்களை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர் வர்த்தகம் முடங்கியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடித்த புதிய நியமம் தமிழுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மம்முட்டிக்கு ஜோடியாக அவர் மலையாளத்தில் நடித்த இப்படம் தமிழில் வாசுகி என்ற பெயரில் இம்மாத கடைசியில் தியேட்டர்களில் வரவுள்ளது.
பாலியல் கொடுமை செய்தவர்களை அவர் எப்படி கொலை செய்கிறார் என்பது தான் கதையாம்.