கடந்த சில நாட்களாக பாடகி சின்மயி வைரமுத்து பற்றி பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்.
இதனால் பலரும் அவரை விமர்சனம் செய்ய வைரமுத்து ஏன் இதுபற்றி வாய் திறக்கவில்லை என பெரிய கேள்வி எழும்பியது. அவரை தொடர்ந்து ராதா ரவி மீது கூட ஒரு பெண் குற்றம் சாட்டினார்.
சின்மயி தொடர்ந்து தனக்கு பெண்கள் அனுப்பும் பாலியல் குற்றச்சாட்டு பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.
தற்போது வைரமுத்து அவர்கள் தன்னுடைய டுவிட்டரில் இதுகுறித்து ஒரு அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018