சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பல ரசிகர்கள் வெயிட்டிங். கௌதம் மேனன், சிம்பு கூட்டணி VTV படத்திற்கு பிறகு இணைந்திருப்பதாலேயே படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு.
அதேபோல் படத்தில் தள்ளிப் போகாதே என்ற பாடலை ரசிகர்கள் பிரம்மாண்டமாக வரவேற்றதோடு இல்லாமல் தற்போது பலரின் ரிங் டோனாகவே இருந்து வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், படம் மே 27ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.