சிம்புவின் AAA படத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் வேறு லெவலில் இருக்கிறது.
அண்மையில் தான் படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. இப்பட முதல்நாள் படப்பிடிப்பில் நடிகை ஸ்ரேயாவும் கலந்து கொண்டிருக்கிறார்.
திண்டுக்கல் அருகேயுள்ள தாடிகொம்பு எனும் ஊரில் உள்ள சௌந்தர ராஜ பெருமாள் கோயிலில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் தனது வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ரேயா.
அக்கோயில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்தது என்ற சரித்திர தகவலையும் வெளியிட்டுள்ளார்.