சிம்புவுக்கு போன வருடம் அவ்வளவு பிரச்சனை. அதையெல்லாம் போக்கும் வண்ணம் அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற தள்ளிப்போகாதே பாடல் மாற்றியது.
இந்நிலையில் இந்த வருடம் சிம்பு நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிம்பு அண்மையில் வெளியிட்டிருந்தார். அதை அவரே வரிகளை எழுதி, பாடியும் உள்ளார்.
தற்போது மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி அவர்கள் ஒரு பேட்டியில், பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் பாடுவதை நடிகர் சிம்பு நிறுத்த வேண்டும் என்று பேசியுள்ளார்.