அஜித்தின் ‘மங்காத்தா’, விஜய்யின் ‘ஜில்லா’ , கார்த்தியின் ‘பிரியாணி’ ஜெய்யின் ‘வடகறி’ உட்பட பல படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் மகத். சிம்புவின் நண்பரான இவருக்கு தொடர்ந்து படவாய்ப்பு கிடைக்கவில்லை.
சிம்பு மூலம் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந் நிகழ்ச்சியின் மூலம் ஓரளவு பிரபலமான மகத் இப்போது சிம்புவின் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் மகத் முதன்முதலாக கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் வரியான ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவின் ரசிகனாக நடிக்கிறார் மகத்.
தனக்கு உதவிய சிம்புவிற்கு நன்றிக்கடனாக அவருடைய ரசிகராக நடிக்கிறாராம்.