சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர்கள்.. அவர்கள் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள்!!

216

 

கலைவாணரில் தொடங்கி, சந்திரபாபு, தங்கவேலு, பாலைய்யா, தேங்காய் சீனிவாசன், நாகேஷ், கவுண்டமணி செந்தில் மற்றும் இன்றைய சூரி வரை ஏராளமானோர் தமிழக மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளனர். ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருந்த போதிலும் கூட, மக்களை தனது ஜனரஞ்சகமான நடிப்பில் ஈர்த்தவர் மனோரமா.

நகைச்சுவை நடிகர்கள் வெறும் சிரிப்புக் காட்ட மட்டுமல்ல சிந்திக்க வைக்கவும் கூட என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கலைவாணர் அவர்களும் விவேக் அவர்களும் ஆவர்கள். பசியிலும் பட்டினியிலும் வாடிக் கிடந்து திரையுலகில் நகைச்சுவை வேடமேற்று முன்னேறியவர்கள் நாகேஷ் அவர்களும் “வைகைப்புயல்” வடிவேலு அவர்களும். சிரிக்க வைத்த இவர்களை பற்றிய சில நெகிழ வைக்கும் ரீல் மற்றும் ரியல் லைப் நினைவுகள் இனி உங்களுக்காக.

சந்திரபாபு

நகைச்சுவை மட்டுமின்றி, நடனமாடுதல், பாட்டு பாடுதல் என பல திறைமைகள் இருந்த நடிகர். நகைச்சுவை நடிகரான சந்திரபாபுவின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை. அவர் மணந்த பெண் முதலிரவன்றே தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூற, மறு நாள் அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தவர் சந்திரபாபு. இந்தச் சம்பவத்தை ஒற்றியே தாம் அந்த 7 நாட்கள் படத்தின் திரைக்கதையை அமைத்ததாக பின்னாளில் நடிகர் – இயக்குனர் பாக்கியராஜ் கூறினார்.

குடிக்கு அடிமை

சந்திரபாபு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் களமிறங்கிய படங்கள் தோல்வியடைந்தன. இதனால், மீளாக் குடிக்கும், பெத்தடின் போதைக்கும் அடிமையாகி இருந்தார். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த பிள்ளைக் கனியமுது என்னும் திரைப்படமே இவரது கடைசிப் படமாகும். அது வெளிவருவதற்கு முன்பாகவே 1974ஆம் ஆண்டு இவர் மரணமடைந்தார்.

நாகேஷ்

நாகேஷ், தமிழ் திரையுலகின் ஓர் முக்கியமான மங்காத நட்சத்திரம். நாடக மேடையில் தனக்கு கிடைத்த சில வினாடி வாய்ப்பினை பயன்படுத்தி, பல வருடங்கள் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்தவர். கமலுடன் நெருங்கிய நட்பில் இருந்தவர். இவரது மகன் ஆனந்த் பாபுவும் நடிகராக இருந்தவர் தான். தனக்கென தனி பாணியையும், உடல் மொழியையும் வைத்து சிரிப்பு மழை பொழிந்தவர். இவரும் மனோரமாவும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

மேடை நாடகம்

ஓர் மேடை நாடகத்தில், வாயிற்று வலி நோயாளியாக கிடைத்த சில வினாடி வாய்ப்பினை பெற்று, இவரது காட்சி நேரத்தில் உள்ளே புகுந்தவர், மருத்துவரிடம் ஐயா வாயிற்று வலிக்கு மாத்திரை வேண்டும் என்ற ஒற்றை வசனத்தை கொண்டு களமிறங்கி, இயக்குனரே எதிர்பாராத படி, பத்து நிமிடங்கள் வலியில் துடிப்பது போல நகைச்சுவையாக நடித்து அரங்கத்திடம் கைத்தட்டல் பெற்று வெற்றிப்பெற்றவர்.

மனோரமா ஆச்சி

அனைவராலும் “ஆச்சி” என்று அன்போடு அழைக்கப்படுபவர் மனோரமா. 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை செய்தவர் மனோரமா என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜி – எம்.ஜி.ஆர் தொடங்கி தனுஷ் – சிம்பு காலம் வரை நிலைத்து நடித்தவர்.

தேங்காய் சீனிவாசன்

“தில்லு-முல்லு” இவரது நடிப்பில் மறக்க முடியாத திரைப்படம். ரஜினியுடன் இணைந்து செம ரகளை செய்த படம். இவரது உச்சரிப்பு வழக்கே தனி தன்மையுடையது. இவர் சிறந்த குணசித்திர நடிகரும் கூட.

அடைமொழி காரணம்

இவர் கே. கண்ணனின் கல் மணம் நாடகத்தில், தேங்காய் வியாபாரியாக சிறப்பாக நடித்திருந்தார். அதற்காக அந்நாடகத்தைப் பார்க்க வந்திருந்த கே. ஏ. தங்கவேலு, இவரை தேங்காய் ஸ்ரீநிவாசன் என்றே அழைக்கப்பட வேண்டும் என்று கூறினார்; அவ்வாறே அழைக்கப்பட்டார். இது தான் இவருக்கு தேங்காய் சீனிவாசன் என்ற அடைமொழி வர காரணமாகும்.

“நக்கல் மன்னன்” கவுண்டமணி

ஏகபோகமாக நாயகர்களையே கலாய்த்து நக்கல் செய்த முதல் நகைச்சுவை நடிகர் என்றால் அது கவுண்டமணி அண்ணன் தான். இவரும் செந்திலும் கூட்டணியாக சேர்ந்து தமிழ் திரையுலக நகைச்சுவை பகுதியை ஏறத்தாழ 25 ஆண்டுகள் கட்டி ஆண்டனர்.

கவுண்டமணி பெயர் காரணம்

சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடித்த நாடகமொன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்ததையொட்டி அவர் கவுண்டமணி என்று அழைக்கப்படலானார்.

“வைகைப்புயல்” வடிவேலு

இவரது சொந்த ஊர் வைகை அதுவே இவருக்கு அடைமொழியாக வந்துவிட்டது. கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் தொடங்கி, விவேக், கருணாஸ் போன்ற பலருடன் நகைச்சுவையில் தூள் கிளப்பியவர்.

பட்டினியில் கிடந்த வடிவேலு

நடிகர் ராஜ்கிரண் அவர் படம் இயக்கிக் கொண்டிருந்த போது, நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர் வடிவேலு. தனது முதல் நாள் நடிப்புக்கு சம்பளமாக இவர் கேட்டது சாப்பிட பரோட்டா. ராஜ் கிரண் அவர்கள் கண்டெடுத்த இந்த சிரிப்பு சூறாவளி, பிறகு பழையதை மறந்தார். பேருக்கு உதவி செய்துள்ளார்.

விவேக்

“இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்” விவேக்கை பிரபலமடைய வைத்த வசனம். 1980-களில் இருந்து நடித்து வரும் இவரை சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். கலைவாணர் போலவே, இவரும் சிந்திக்க வைக்கும்படி நிறைய நகைச்சுவை சொன்னதால் இந்த அடைமொழி இவருக்கு சொந்தமானது.

சமூக பணிகள்

நகைச்சுவை மட்டுமின்றி, சமூக பணிகளிளிலும் ஈடுபடும் பண்புடையவர் விவேக். தமிழகம் முழுதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு, முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் பாராட்டுகள் பெற்ற பெருமைக்குரியவர்.

– See more at: http://www.manithan.com/news/20170620127828#sthash.unBXpL3P.dpuf

SHARE