சிரிப்பு யோகாவால் கிடைக்கும் பலன்கள்

742
சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா? 
கவலை வேண்டாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும். தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங்கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன.

அந்த வகையில் சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள்.

சிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதிக அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும்.

சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்கவும் முன்னேற்றத்தை தரவும் முடிகின்றது.

SHARE