சிரியா ஊடகவியலாளர்கள் 5 பேரை தூக்கிலேற்றிய ஐ.எஸ்!

213

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)

சிரியா ஊடகவியலாளர்கள் ஐந்து பேரை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களை தூக்கிலேற்றி கொலை செய்துள்ளனர்.

பிரித்தானியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பான SOHR இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிரியா ஊடகவியாளர்கள் 5 பேரை தங்களுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதாக கூறி ஐ.எஸ் குழுவினர் கடத்தி சென்றுள்ளனர்.

தொடர்ந்து 2 மாதங்கள் அவர்களை சித்திரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டிசம்பர் மாதத்தில் ஊடகவியலாளர்கள் 5 பேரையும் தூக்கிலேற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

சிரியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Deir el-Zor என்ற ஐ.எஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதியில் நடந்தேறும் சம்பவங்களை இவர்கள் 5 பேரும் தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது ஊடகவியலாளர்களை கொலை செய்துள்ள வீடியோ பதிவை வெளியிட்டுள்ள ஐ.எஸ் அங்குள்ள ஊடகங்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் உடல்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஊடகவியலாளர்களின் இறப்புச் செய்தியை வெளியிட்டால் அது ஐ.எஸ் அமைப்பினரின் கோபத்தை தூண்டும் வகையில் அமையலாம் என அவர்களது குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மீது அதிகமாக தாக்குதல் நடத்தப்படும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது சிரியா.

இங்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை 95 ஊடகவியலாளர்களை பல்வேறு காரணங்களால் கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE