சிறந்த அணித்தலைவர் யார்? டோனியா..! கோஹ்லியா..!

275

625.500.560.350.160.300.053.800.748.160.70

டோனி, கோஹ்லி இருவர்களில் இந்திய அணியின் சிறந்த அணித்தலைவர் யார்? என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் பதிலளித்துள்ளார்.

இந்திய பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போதே, அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த மெக்ராத், இருவர்களில் ஒருவரை சிறந்தவராக தெரிவு செய்ய மறுத்துவிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது, இருவருக்கும் தனித்திறமை வேறுபாடுகள் உள்ளது. டோனி, கோஹ்லி இருவரும் களத்தில் முற்றிலும் வேறுபட்ட வீரர்கள். டோனி, மிஸ்டர் கூல் அமைதியானவர். மறுபுறம் விராட் வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர்.

விராட் மிகவும் நம்பிக்கையான தரமான வீரர். அவுஸ்திரேலிய வீரர்கள் போல் அவர் ஆக்ரோஷமாக ஆடுவதை நான் மிகவும் விரும்புவேன்.

டோனி மரியாதையான வீரர், அணியை திறமையாக வழிநடத்தி செல்வார். இருவரும் முற்றிலும் மாறுபட்ட ஆளுமை கொண்டவர்கள் என தெரிவித்துள்ளார்.

SHARE