சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்த டோனி!

309

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறச் செய்த டோனி, தான் சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் 53-வது லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ரைசிங் புனே அணிகள் மோதின,

இதில், பஞ்சாப் அணி 20 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணிக்கு கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது.

அக்சர் படேல் கடைசி ஓவரை வீச ‘கேப்டன் கூல்’ தோனி பேட் செய்தார். முதல் பந்தில் ரன் ஏதும் சேர்க்கப்படாத நிலையில், 5 பந்துகளுக்கு 23 ரன்கள் தேவை என்ற கடினமான நிலைக்கு புனே அணி தள்ளப்பட்டது.

படேல் வீசிய அகலப்பந்து காரணமாக புனே அணிக்கு எளிதாக 1 ரன் கிடைத்தது. இந்நிலையில், 5வது பந்தை சிக்சருக்கு விளாசிய தோனி, 6 பந்துகளில் 16 ரன்கள் என்பதாக இலக்கை வெற்றியை நோக்கி சிறிது நகர்த்தினார்.

4 பந்துகளில் 16 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற கடினமான நிலையில், 3வது பந்தை பவுண்டரிக்கு தோனி விளாசினார்.

ஆனால், ஹசிம் அம்லா சிறப்பாக செயல்பட்டு பந்தை தடுத்ததால் ரன் ஏதும் கிடைக்கவில்லை.

இதனால், 3 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலைக்கு புனே அணி தள்ளப்பட்டது. 4வது பந்தை பவுண்டரி அடித்த , டோனி அதிரடியாக விளையாடி 5வது பந்தை சிக்சருக்கு விளாசினார்.

வெற்றிக்கு கடைசி பந்தில் சிக்சர் அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பிற்கு சென்றது.

படேல் வீசிய பந்தை அற்புதமாக ஷாட் அடித்த டோனி, புனே அணியின் வெற்றியை உறுதி செய்ததுடம், தான் ஒரு சிறந்த பினிஷர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் புனே அணி 5 வெற்றிகளுடன் 7-வது இடத்தையும், பஞ்சாப் 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தது.

625.117.560.350.160.300.053.800.210.160.90

SHARE