சிறப்பாக இடம்பெற்ற குறும்பட வெளியீட்டு விழா

272
மன்னார் நகர் நிருபர்
மன்னார் மவட்ட பிராந்திய ஊடகவியளாலரும் எழுத்தளரும் கவிஞருமான திரு.வை.கஜேந்திரனுடைய இயக்கத்தில் உருவாக்கப்பட்ட மூன்று குறும்திரைப் படங்கள் நேற்று காலை 10 மணியளவில் வெளியீடு செய்யப்பட்டது.
வெற்றிகலை சங்கத்தின் அணுசரனை மற்றும் தமிழமுது நண்பர் வட்டத்தின இணை அணுசரனையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்று கிழமை காலை இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திரு.வை.கஜேந்திரனுடைய கதை திரை கதை வசனத்தில் உருவான அடி கௌரவ பிச்சை மற்றும் குடி ஆகிய மூன்று குறுந்திரை படங்கள் ஒரே நேரத்தில் வைபவ ரீதயாக வெளியீடு செய்யப்பட்டது.
சமூக ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குறித்த மூன்று திரைபடங்களையும் வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகண சுகாதார அமைச்சர் மற்றும் மன்னார் நகர் பிரதேச செயளாலர் திருவாளர் பரமதாசன் ஆகியோர் இணைந்து வெளியிட மன்னார் மாவட்ட சமூக பொருளாதர மேம்பாட்டு நிலைய குழு தலைவர திருவாளர் யாட்சன் பெற்று கொண்டார்.
தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட படங்கள் அனைவருடைய பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டதுன் கருத்துரைகள் மற்றும் விமர்சன உரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE