பிரித்தானிய நாட்டில் சிறுமிகள் உள்பட 300 பெண்களை கூட்டாக கற்பழித்த 18 நபர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள நியூகேசல் நீதிமன்றம் தான் இந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இக்கொடூரமான சம்பவம் கடந்த 2011 முதல் 2014 வரை நடைபெற்று வந்துள்ளது.
ஒரு பெண் மற்றும் 17 ஆண்கள் சேர்ந்த ஒரு கும்பல் தொடர்ச்சியாக சிறுமிகளையும் பெண்களையும் குறிவைத்து கற்பழித்து வந்துள்ளனர்.
நியூகேசல் மற்றும் கேட்ஸ்ஹெட் ஆகிய நகர்களை சேர்ந்த 13 வயதுள்ள சிறுமிகள் முதல் 25 வயதுடைய இளம்பெண்கள் வரை இந்த கும்பல் கடத்தி சென்று கற்பழித்துள்ளது.
இலவசமாக மது, போதை மருந்து தருகிறோம் என ஆசை வார்த்தைக் கூறி பெண்களை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர், அவர்களுக்கு போதை மருந்து கொடுத்து மயங்க வைத்து கற்பழித்துள்ளனர்.
இந்த கும்பலிடம் இதுவரை 300-க்கும் அதிகமான பெண்கள் கற்பழிப்பிற்கு உள்ளானது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் பேசியபோது, ‘தங்களை கற்பழித்தவர்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகமாக இருந்ததாக’ வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சிறப்பு படையை உருவாக்கிய பொலிசார் கடுமையான விசாரணைக்கு பின்னர் 18 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் மீது கற்பழிப்பு, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுப்படுத்தியது உள்ளிட்ட 100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர்.
பிரித்தானியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது 18 குற்றவாளிகளுக்கும் ஒட்டுமொத்தமாக 300 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.