சிறுமியின் படுகொலை தொடர்பில் யாழ். மாவட்ட செயலாளரிடம் வழங்கப்படவுள்ள மனு

151

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜீனாவுக்கு நீதிகோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்று வருகிறது.

சுழிபுரம், காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் “நீதித்துறையே மௌனமா?, நேற்று வித்தியா இன்று ரெஜினா நாளை யாரோ” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

இதேவேளை சிறுமி றெஜினா படுகொலை சம்பவம் தொடர்பில் மாவட்ட செயலாளரிடம் மனு ஒன்று கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முன்பாக மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE