தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர், மாத்தறை பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விரிவுரையாளர், தான் தத்தெடுத்த ஐந்தரை வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
விரிவுரையாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சிறுமியை பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.