பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் குறித்த மாணவியின் தந்தை, பாட்டனார் மற்றும் மச்சான் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை குறித்த சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுமியின் பாட்டி கொடுத்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 15 வயதான சிறுமி ஹட்டன் பிரதேசத்ததைச் சேர்ந்ததுடன், அவரது தாய் வெளிநாடு சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
சிறுமி அவரது மூத்த சகோதரியுடன், மாளிகாவத்தையில் அமைந்துள்ள பாட்டனார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குறித்த வீட்டில் பல முறை சிறுமி, பாட்டனார் மற்றும் மச்சானினால் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த சிறுமி தனது தந்தையினாலும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.