சிறுவன் மீது கொதிநீர் ஊற்றிய குற்றச்சாட்டில் அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சிறிய தாயை 1 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்ததுடன் வழக்கை நீதிவான் ஒத்திவைத்தார்.
06.09.2016 அன்று மஸ்கெலியா பொலிஸாரினால் அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டார்.
கடந்த 04.09.2016 இரவு மஸ்கெலியா ஸ்டஸ்பி தோட்டத்தில் 8 வயதுடைய சிறுவனை தனது சிறியதாய் கொதிநீரை ஊற்றி காயப்படுத்திய நிலையில் 05.09.2016 மஸ்கெலிய பொலிஸாரினால் 29 வயதுடைய ஒரு குழந்தையின் தாயான குறித்த சிறுவனின் சிறிய தாயையும், ஆச்சியையும் கைது செய்தனர்.
விசாரணைகளின் பின் ஆச்சி விடுதலை செய்யப்பட்டதுடன் சிறியதாய் மீது வழக்கு பதிவு செய்த மஸ்கெலிய பொலிஸார் 06.09.2016 அட்டன் மாவட்ட நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே 1 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்தும், எதிர்வரும் 28.09.2016 நீதிமன்றில் ஆஜராகுமாறும் அட்டன் மாவட்ட நீதவான் பிரசாத் லியனகே உத்தரவிட்டார். காயமுற்ற நிலையில் மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்