சிறுவர்களின் எதிர்காலத்தை செப்பனிடுவது எமது தலையாய கடமையாகும் – சி.சிறீதரன் 

345

பிள்ளைகளின் எதிர்காலத்தை வளம்படுத்தும் முக்கிய பணியை செய்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் வழிநடத்தலில் சிறுவர்களின் வெளிப்பாடுகளை காணுகின்றமை மகிழ்ச்சி தருகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

 சாவகச்சேரி லிகோறியா முன்பள்ளியின் விளையாட்டுப்போட்டி கடந்த 14ம் திகதி நடைபெற்றுள்ளது. இதில் முதன்மை விருந்தினராக அவர் கலந்துகொண்டு முன்பள்ளிச்சிறார்களை மதிப்பளித்து பாராட்டி உரையாற்றினார்.

இன்றைக்கு நமது கண்களாக இருக்கின்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை வளம்படுத்தும் முக்கிய பணியை செய்கின்ற முன்பள்ளிகளின் ஆசிரியர்களின் வழிநடத்தலில் சிறுவர்களின் வெளிப்பாடுகளை காணுகின்ற மகிழ்ச்சி தருகின்றது.

முன்பள்ளிகளால் ஆற்றப்படும் பணி சிறுவர்களின் மனதுகளோடு பேசுவது. அது ஒரு வகையான தாய்மையுடன் கூடிய அரவணைப்பு. அது எல்லோராலும் செய்து விட முடியாது. அதை முன்பள்ளி ஆசிரியர்கள் செய்கின்றார்கள். அவர்களின் கையில் பிள்ளைகளை தந்துள்ளோம் என்பதை விட எமது இனத்தின் எதிர்காலத்தை தந்துள்ளோம் என சொல்வதுதான் பொருத்தம். இன்றைக்கு நம் சமுகத்தில் அரங்கேற்றப்படும் சமுகப்பிறழ்வுகளுக்கு மத்தியில் இந்த சின்னஞ் சிறார்கள் மனதுகளில் கறைபடாமல் அழைத்துப் போய் அடுத்த காலத்தின் விடிவெள்ளிகளாக ஒப்படைக்க வேண்டும். இது எங்கள் எல்லோரது கைகளிலும் உள்ள கடமை. இந்த முன்பள்ளிச்சிறார்களின் உற்சாகத்துக்கும் ஊக்கத்துக்கும் என் பாராட்டுக்கள் என்றார்.

SHARE