சிறுவர்களை தவறாகப் பயன்படுத்திய மஹிந்த – உண்மை அம்பலம்

226

நடைபெற்று முடிந்த பாதயாத்திரையில் மஹிந்த ராஜபக்ஸ சிறுவர்களை தவறாக பயன்படுத்தியது மட்டுமல்லாது அதை நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“சிறுவர்கள் தங்கள் எண்ணங்களைக் கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு, அவர்களின் எதிர்கால அரசியலுக்கு இது ஒரு அத்திவாரமாக அமையும், அவர்களது சுதந்திரத்தை நாம் தட்டிப்பறிக்க முடியாது” என மஹிந்த நேற்று கூறியிருந்தார் இது முற்றிலும் ஒரு தவறான கருத்துக் கணிப்பாகும் என இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பில் வாசுதேவ நாணயக்காரவும் “சிறுவர்கள் தமது கருத்துக்களை பகிர்வதற்கு முழு சுதந்திரம் உண்டு, அவர்கள் யாரும் சொல்லிக்கொடுத்து பேசுவதில்லை, அவர்களுடைய மனதில் தோன்றுவதையே பேசுவார்கள், இவ்வாறிருக்க சிறுவர்களை பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தியது ஒன்றும் பெரிய விடயம் இல்லை எனக் கூறியிருந்தார். இதுவும் ஒரு முட்டாள்தனமான கருத்து என பாலித ரங்கே பண்டார சுட்டிக்காட்டினார்.

சிறுவர்களைப் பயன்படுத்துவது தவறு இல்லை என்று கூறினால், வாசுதேவ நாணயக்கார அவருடைய பிள்ளைகளையும், விக்னேஸ்வரனுடைய பிள்ளைகளையும் கொண்டுவந்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கலாமே, ஏன் அவர் அதை செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாரிய துரோகம் செய்துள்ளதோடு நாட்டை காட்டிக்கொடுக்கும் வேளையிலும் ஈடுபட்டுள்ளார்.

மக்களுக்குச் சொந்தமான காணிகளை வெளிநாட்டுக்கு விற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் செய்யாத வேலைகளைச் செய்துள்ளதாகவும் மஹிந்தவை சாடினார் பாலித.

ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஓய்வாக ஒரு இடத்தில் இருக்காமல் மக்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளமை மிகவும் வெட்கப்படவேண்டிய ஒன்றாகும்.

மேலும் மஹிந்த நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.download

SHARE