சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் யாழில் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ்

255
வடக்கில் சிறுவர்கள் மீதான பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதாகவும் அதில் யாழ் மாவட்டத்திலேயே அதிக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது என ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது எமது எதிர்கால சந்ததியினரைப் பெருமளவில் பாதிப்படையச் செய்யும் செயற்பாடாகவே உருவெடுத்து வருகிறது. எனவே. இதனைக் கட்டுப்படுத்தி, எமது சமூகத்திலிருந்து இதனை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், சிறுவர் விவகாரங்களுக்குப் பொறுப்பான ராஜாங்க அமைச்சர் ஒருவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ் மாவட்டம், சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளில் வட மாகாணத்தில் முதலிடம் வகிப்பது வேதனைக்குரிய விடயமாகும். இது எமது சமுதாயம் மற்றும் சிறுவர்கள் மீதான அக்கறையின்மையையே எடுத்துக் காட்டுகிறது.

எனவே, இந் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவையான சட்ட மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் எமது சமூக, சமய அமைப்புக்கள், தலைமைகள். சமூக ஆர்வலர்கள். புத்தி ஜீவிகள். கல்விமான்கள் உட்பட்டோர் தங்களது ஆலோசனைகளையூம். ஒத்துழைப்புகளையும் வழங்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

57535_douglas-davenanda---08

SHARE