சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தக்கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

318
யாழ்.மாவட்டத்தில் சிறுவர் வன்முறைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்தக்கோரி இன்றைய தினம் யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் தேசிய பெண்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடத்தியிருக்கின்றன.

இன்றைய தினம் காலை 10 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், ஆஸ்பத்திரி வீதி ஊடாக நகர்ந்து, பின்னர் பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து யாழ்.மாவட்டச் செயலகம் வரை சென்றது.

அங்கு ஜனாதிபதிக்கான மகஜர் கையளிக்கப்பட்டது. இதில் சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் தொண்டு அமைப்புக்கள் சார்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சிறுவர்கள் மதுபானம், போதைப்பொருள், சிறுவர் வன்முறைகள், துஸ்பிரயோகம் ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கோரும் பதாகைகளையும், கோசங்களையும் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததுடன்,

சிறுவர்கள் முக மூடிகளை அணிந்து கொண்டும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இறுதியாக ஜனாதிபதிக்கான மகஜரை யாழ்.மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

SHARE