தொடர்பிலும் டெங்கு பாதிப்புகள் தொடர்பிலான விடங்யகளில் சிவில் பாதுகாப்பு குழுவினால் விழிப்பூட்டல் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என லெதண்டி பிரதேச கிராம உத்தியயோகஸ்தர் எம்.யோகமலர் தெரிவித்தார்
அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட லெதண்டி கிராம சேவகர் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் காசல்ரி காலாசார மண்டபத்தில் 01.08.2016 திங்கட்கிழமை சிவில் பாதுகாப்பு பொலிஸ் பொருப்பதிகாரி சந்தசேகரன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் அட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பங்குகொண்ட கூட்டத்தில்
தொடர்ந்து உரையாற்றுகையில் சிறுவர்கள் சிறந்த பிரஜைகளாக எதிர்காலத்தில் உறுவாக்கப்பட வேண்டும் தற்போது சிறுவர்களை வேலைக்கமர்த்தல் துஸ்பிரயோகம் செய்தல் போன்ற சமூக சீர்கேடான செயல்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் அர்பணிப்புடன் பங்காற்ற வேண்டும் அவ்வாறே டெங்கு நோய் பரவலை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலை தூய்மைபடுத்தும் விழிப்பூட்டல் செயல்பாடுகளீலும் முன்னின்று செயல்பட வேண்டும் என தெரிவித்தார்