சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம்

100

இலங்கையில் சுமார் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தரவுகளின்படி உலகில் 152 மில்லியன் சிறுவர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் சுமார் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் அவர்களின் இளமைக் கல்வி முற்றாக மறுக்கப்படுகிறது. சிறுவர்கள் தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களின் நீண்டகால உடல் ஆரோக்கியம், பாதிக்கப்படுவதாக சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

SHARE