பேஸ்புக் மற்றும் ஸ்கைப் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு சிறைக்கைதிகளுக்கு அனுமதி வழங்கலாம் என முன்னோடி திட்டத்தின் கீழ் சிறைச்சாலை பரிசோதகர் குழு பரிந்துரை செய்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தங்கள் குடும்பதினருடன் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் இவர்களுக்கு வரும் அழைப்புகள், சிறை கண்காணிப்பாளரின் முன்னிலையில் இவர்களுக்கு கொடுக்கப்படும், அதனை இவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த கைப்பேசி அழைப்புக்கான தொகையை, சிறைக்கைதிகளின் ஊதியத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் HMIP (HM Inspectorate of Prisons) நடத்திய கணக்கெடுப்பில், சிறைக்குள் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள் உள்ளனர்.
எனவே சிறையில் இருந்தபடியே, தங்கள் குழந்தைகளை பேணிக்காப்பதற்கான வழிமுறைகளை நம்மால் ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.
எனவே பேஸ்புக் மற்றும் ஸ்கைப் வசதியினை பயன்படுத்துவற்கு கைதிகளுக்கு அனுமதி கொடுத்தால், அவர்கள் வீடியோ கலந்துரையாடல் மூலம் முகம் பார்த்து பேசிக்கொள்வார்கள் என கூறியுள்ளனர்.
மேலும் பாதுகாப்பு செயல்முறை கருதி, கைப்பேசி அழைப்புகளின் எண்கள் கைதிகளின் கணக்கில் தான் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர், இந்த கருத்திற்கு சிறை கண்காணிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.