சிறைக் கைதிக்கு போதைப்பொருள் கொண்டுசென்ற மூவர் கைது

150

சிறைக்குள் சிறைக் கைதி ஒருவருக்கு  மிக சூட்சுமமான முறையில் 50 மில்லிகிரேம் ஹெரோயின் போதை பொருளை கொண்டு சென்ற குறித்த கைதியின் மகன் உட்பட மூவரை பதுளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த சிறை கைதி போதை பொருள் விற்பனை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு  பதுளை பிரதான சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறைக்குள்ளிருந்தவாரே போதை பொருளை ஏனைய சிறைக் கைதிகளுக்கு விற்பனை செய்யும் முகமாகவே சிறைக் கைதியின் மகன் மிக  சூட்சுமமான முறையில் தனது தகப்பனுக்கு வழங்கும் போது பதுளைப் பொலிஸாரினால் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு குறித்த இளைஞனுடன் சென்றிருந்த ஏனைய இருவரையும் பதுளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்மருந்து குப்பியில்  பல் மருந்தினை அகற்றிவிட்டு அந்த குப்பியில் ஹெரோயினை வைத்து நிரப்பி சிறைக்கைதிக்கு வழங்கப்பட்டமை பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த  மேலும் ஐந்து பக்கட் ஹெரோயின் போதை பொருளையும்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணையின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக  பதுளைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரோகன வனிக சேக்கர தெரிவித்தார்.

SHARE