சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய கவனம்

354

 

 

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய கவனம் செலுத்துவதாகவும், வெகுவிரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

jail welik

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான அறிக்கையை வெகுவிரைவில் அமைச்சரவையில் சமர்ப்பித்து கைதிகளை விடுவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பில் தற்போதைய நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாம் தொடர்ச்சியாக அரசுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். கடந்த காலத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தியுள்ளோம். எனவே, எமது முயற்சியை நாம் கைவிடப்போவதில்லை. வெளிநாடு சென்றுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் அவரை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளோம். அத்தோடு நாம் சேகரித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பிலும் அவருடன் பேச்சு நடத்தி அதன் பின்னர் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். எப்படியேனும் வெகுவிரைவில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல செய்தியை எதிர்பார்க்க முடியும். கைதிகளின் விடுதலை தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றது

SHARE