கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கைதிகளை ஒரு சிறையில் இருந்து மாற்று சிறைக்கு மாற்றியபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இரவு 7.30 அளவில் சம்பவம் இடம்பெற்றவுடன் பொரளை பொலிஸிற்கு அறிவிக்கப்பட்டு பொலிஸ் குழு ஒன்றும் அங்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் சம்பவத்தின்போது சிறைச்சாலையின் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையதிகாரி மற்றும் சிறைக்காவலர் விளக்கமறியலில்
கொழும்பு மெகசின் சிறைச்சாலை ஜெயிலருக்கும் சிறை காவலாளிக்கும் இடையில் நேற்று ஏற்பட்ட தாக்குதலின் காரணமாக இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி தாக்குதலானது கைதிகளை சிறைகளிலிருந்து மாற்றும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தாக்குதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நேற்று மாலை 07.30 மணியளவில் தாக்குதல் இடம்பெற்ற வேளை பொலிஸாருக்கு கிடைத்த தொலைப்பேசி அழைப்பின் பின்னர் அவர்கள் இருவரும் பொரளை பொலிஸாரிடம் விசாரணைக்காக அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மேலும் இத்தாக்குதலின் காரணமாக சிறைக்கு சொந்தமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.