சிறையில் கம்பி எண்ணும் அழகி

263

சீனாவில் நடந்த உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்காக வந்த கொலம்பியா நாட்டு அழகிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த ஜூலியானா லோபஸ் சர்ரசொலா(22), இவர் அங்கு நடைபெற்ற மிஸ் ஆண்டிகுவா 2014-வாக தெரிவானதை அடுத்து சீனாவில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு யூலை 18 ஆம் திகதி கங்க்ஜோ பையூன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது, அவரது உடமைகளை பொலிசார் சோதனை செய்த போது மடிக்கணணியில் 610கி கொக்கைன் என்ற போதை பொருளை கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து இவரை பொலிசார் கைது செய்தனர், இவர் மீதான வழக்கு குவாங்டோங் மாநிலத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் நடந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஜூலியானா தான் போதைப்பொருள் கடத்தியதாகவும், செர்ஜியோ என்பவர் தான் தன்னை போதை பொருள் கடத்துமாறு வற்புறுத்தியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்தவுடன் நாடு கடத்தவும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே ஜூலியானா வழக்கறிஞர், ஜூலியானா போதை பொருளை கடத்தாவிட்டால் செர்ஜியோ அவரது குடும்பத்தை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாகவும், இதற்கான ஓடியோ பதிவு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது கருணை மனுவிற்கு ஆதாரமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.ater

SHARE