சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க ஐம்பது ஆயிரம் 50,000/= வழங்க முடிவு… கிராம அபிவிருத்தி அமைச்சர்…
ஏற்க்கனவே அறிவித்ததற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் சுமார் 324 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஐம்பதுனாயிரம் ரூபாய் வழங்கவுள்ளதாக வடக்கு மாகான கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்,
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக மன்னார் மாவட்டடத்தில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களை 20-07-2015 திங்கள் மாலை 2 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு அவர்களது வாழ்வாதார முன்னேற்றத்திற்க்காக எதிர்வரும் வாரம் கிராம அபிவிருத்தி திணைக்களமூடாக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 50,000/- ரூபா வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ் ஒன்றுகூடலில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் திரு.ஜே.ஜே.சி.பெலிசியன் அவர்களும் கலந்துகொண்டனர்
அத்தோடு இவ்வாறு எதிர்வரும் 23-07-2015 வியாழன் மாலை 3 மணிக்கு யாழ்ப்பான மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கைதிகளின் குடும்பங்களை அமைச்சரின் நாவலர் வீதியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அவர்களது வாள்வாதாரத்திட்டங்களும் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் தொடர்ந்து 24-07-2015 வெள்ளி காலை 11 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலும், மாலை 3 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்திலும் இவ்வாறான சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.