சிலாபம் – புத்தளம் பாதையானது வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதையின் தெதுறு ஓயாவிற்கு அருகில் உள்ள லுணு ஓய பாலத்தை சூழவுள்ள பகுதி வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளதால் இதனூடாகப் பயணிக்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வரை குறித்த பாதையில் இரண்டரை அடி உயரத்திற்கு வெள்ள நீர் காணப்படுவதால் மாற்று பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இதேவேளை, அம்பத்தளையிலிருந்து தொட்லங்க வரையான பாதையும் நீரிழ் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.