பல படங்களில் கமிட்டாகி பிஸி நாயகனாக வலம் வருகிறார் தனுஷ். இவரின் பவர் பாண்டி படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனுக்கு மான் கராத்தே என்ற வெற்றி படத்தை கொடுத்த திருக்குமரன் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.
அதுவும் பவர் பாண்டி ரிலீஸ் ஆகும் அதேநாளில் இப்பட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம். ஏற்கெனவே இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் முடிவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.