சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் என்ன கதை- ஜெயம் ரவி பேட்டி

186

தனி ஒருவன் என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த மோகன் ராஜா இப்போது சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அண்மையில் கூட படக்குழு நீண்ட நாள் மலேசியாவில் படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பினர். இந்நிலையில் வனமகன் பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் வேலைக்காரன் படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு அவர், இந்த பட கதை எனக்கு கொஞ்சம் தெரியும், மிகவும் அருமையான கதை. தனி ஒருவன் படத்திற்கு பிறகு இருக்கும் அந்த எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும். அடிக்கடி படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்பேன், நானும் படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

SHARE