சின்னத்திரை பிரபலமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது ஒரு கலக்கு கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் கனா என்ற படம் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார், அந்த படமும் செம ஹிட்.
அடுத்ததாக சின்னத்திரை பிரபலம் ரியோ ராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து டப்பிங் வேலைகள் நடக்கிறது.
இந்த நிலையில் இப்படத்திற்கு படக்குழு எம்.ஜி.ஆரின் ஹிட் பாடலான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்களாம்.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.