சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே 3 படங்களுக்கு பூஜை போட்டு எடுத்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது லைகா தயாரிப்பிலும் நடிக்கவுள்ளார்.
இப்படத்தை நானும் ரவுடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கின்றார் என இன்று அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.
இது மட்டுமின்றி நாம் முன்பே சொன்னது போல் ராஜேஸ், மித்ரன், பாண்டிராஜ், ரவிகுமார் ஆகிய படங்கள் லைனில் இருக்கின்றது, மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க கூட சிவகார்த்திகேயனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.