தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்போது ரொம்ப பிஸி. அடுத்தடுத்து இப்போதே நிறைய படங்களில் கமிட்டாகி விட்டார்.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மாயா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு இப்படம் மூலம் நிறைவேறியுள்ளதாம்.
நயன்தாராவிடமே தனக்கு உங்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை என சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறாராம்.
இதற்கு முன் பல மேடைகளில் நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்பது தனது ஆசை என கூறிய ஜெயம் ரவிக்கும் தனி ஒருவன் படம் மூலம் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.