சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் சமந்தா.

308

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். அது எந்த படத்திற்கு என்பதை கீழே பார்ப்போம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘ரெமோ’ படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இப்படம் வருகிற அக்டோபர் 7-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மோகன்ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் பொன்ராம் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

மோகன்ராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகியிருந்த நிலையில், தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் காமெடி வேடத்தில் சூரியும் நடிக்கவுள்ளார்.

பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஏற்கெனவே வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய இரண்டு படங்களுக்கும் இசையமைத்த டி.இமான் இப்படத்திற்கும் இசையமைக்கவிருக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 4-வது தயாரிப்பாக தயாரிக்கவிருக்கிறது.samantha-sivakarthikeyan

SHARE