சிவகார்த்திகேயனை கலாய்த்த ஆட்டோ ஓட்டும் நபர்- என்ன சொல்லியிருக்கார் பாருங்க

201

தமிழ் சினிமாவின் பிரின்ஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வேலைக்காரன் படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

தற்போது இவர் பொன்ராம் இயக்கத்தில் புதுப்படம் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் மெரினா படம் நடிக்கும் போது ஒரு ஆட்டோ ஓட்டும் நபர் அவரை கலாய்த்திருக்கிறாராம். அது என்னவென்றால் ஆட்டோ ஓட்டும் நபர் சிவகார்த்திகேயன் நடிப்பை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாராம், பின் நண்பரை அழைத்து ஜீவா படப்பிடிப்பு போகிறது இங்கே வா என்று அழைத்திருக்கிறார்.

இதனை கேட்ட சிவகார்த்திகேயன் நான் ஜீவா இல்லை என்று கூற, அட உண்மையா இவ்வளவு நேரம் பார்த்தேன் என்று கூறி அந்த இடத்தைவிட்டு கிளம்பிவிட்டாராம். இதை ஒரு பேட்டியிலேயே மிகவும் காமெடியாக கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

SHARE