சிவகார்த்திகேயன் அர்ஜுன் ரெட்டியாக மாறினால் எப்படி இருக்கும்- உள்ளே பாருங்க புரியும்

134

பிரபலங்கள் சினிமாவை தாண்டி போட்டோ ஷுட் எடுப்பது வழக்கம் தான். நாயகிகள் பட வாய்ப்பு இல்லையென்றால் போட்டோ ஷுட் நடத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

அதிலும் பாலிவுட் நாயகிகள் பேஷனான உடைகள் அணிந்து நிறைய புகைப்படங்கள் அப்படி எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் அப்படி ஒரு புதிய லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியவர் சிவகார்த்திகேயன்.

அந்த புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கினர். நேற்று டுவிட்டர் பக்கத்தில் அவர், மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தெலுங்கு சினிமாவில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவின் லுக் போலவே இவரும் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

ரசிகர்களும் அர்ஜுன் ரெட்டி லுக்கில் இவரும் சரியாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்கின்றனர்.

அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் மூலம் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE