மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபாகத் ஃபாசில் நடிக்கும் வேலைக்காரன் நாளை வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்கள் கருதி இப்படத்தை டிசம்பர் 22 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்கள்.
இந்நிலையில் இப்படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் ஷூட்டிங் மீதம் இருக்கிறது. மேலும் படத்தை எடிட் செய்த பிறகும் படத்தின் நீளம் 4.1/2 மணிநேரம் இருப்பதாக சொல்கிறார்கள்.
இதனால் இப்படத்தை வேலைக்காரன் 1, 2 என ரிலிஸ் செய்யலாமா என ஆலோசனை நடத்தி வருகிறார்களாம். மேலும் படத்தை 2018 ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகையில் வேலைக்காரன் 1 ஐயும், தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 ல் வேலைக்காரன் 2 ஐயும் வெளியிட நினைப்பதாக சொல்லப்படுகிறது.