சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. அவரது நடிப்பில் 14, 15 படங்களில் வேலைகள் நடந்து வருகிறது.
அண்மையில் சன் பிக்சர்ஸ் பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிப்பதாக செய்தி வெளியிட்டிருந்தனர். சிவகார்த்திகேயன் முதன்முதலாக பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்ற படம் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.
இவர்களது இந்த புதிய படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள் என்று ஏற்கெனவே நாம் கூறியிருந்தோம்.
தற்போது என்ன விஷயம் என்றால் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நடிக்க இருக்கிறாராம்.