சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்

166
சிவகார்த்திகேயன் பட தலைப்பை வெளியிட்டார் ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் – சிவகார்த்திகேயன்
ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் எஸ்.கே.14 என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு தற்போது ‘அயலான்’ என்று பெயர் வைத்து மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டிருக்கிறார்.

இது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

SHARE