சிவகார்த்திகேயன் விக்னேஷ் இணையும் படத்தின் தலைப்பு

128

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை காமெடி படங்களுக்கு புகழ் பெற்ற ராஜேஷ் இயக்கியுள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அடுத்ததாக நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்திற்கு கதாநாயகியாக கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்திற்கு எல்.ஐ.சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

SHARE