சிவனொளிபாதமலைக்கு சொந்தமான வனப்பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவான காணியை தனியார் ஒருவர் சொந்தமாக்கி அதனை தேரர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

259

sripada_drone_photo_6_24122015_kaa_gry

புனித பூமியான சிவனொளிபாதமலைக்கு சொந்தமான வனப்பகுதியானது தனியார் உடைமையாக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா – மறே தோட்டப் பகுதியான நல்லதண்ணி தோட்டத்தின் வனப்பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவான காணியை தனியார் ஒருவர் சொந்தமாக்கி அதனை தேரர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

குறித்த தேரர் அந்த வனப்பகுதியில் உள்ள பெறுமதிவாய்ந்த மரங்களை வெட்டி விற்பனை செய்வதுடன் அங்கு விடுதிகள் கட்டப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு உரித்தான வனப்பகுதி சட்டவிரோதமாக இவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றது, எனவே சம்பந்தப்பட்டோர் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE