
சிவனொளிபாத மலை பருவகாலம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை நிறைவு பெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக சிவனொளிபாதமலை மகாநாயக தேரர் பெக்மமுவே தம்ம தின்ன தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி பெல்மடுல்ல ரஜ விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்டு கடந்த 6 மாத காலமாக சிவனொளிபாதமலையில் வைத்து வழிபட்ட சமன் தெய்வதிருவுருவகும்பம் இரத்தினபுரி வழியாகவும் ஹட்டன் வழியாகவும் மீண்டும் பெல்மடுல்ல ரஜ மகா விகாரைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்தார்.