சிவனொளிபாத மலை பருவகால யாத்திரை எதிர்வரும் 13.12.2016 அன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் பாதை புணரமைப்பு பணியினை பொதுமக்கள் ஒன்றினைந்து முன்னெடுத்துள்ளனர்.
குறிப்பாக ஹட்டன் , மஸ்கெலிய பிரதான வீதியிலும் , மஸ்கெலிய நல்லத்தன்னி பிரதான வீதியிலும் சிரமதான பணிகள் இன்றைய தினம்(11) முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வருடத்திற்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரமும், பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனியாக நாளைய தினம் சுபவேளையில் புறப்பட்டு செல்லவுள்ளது.
எனவே மேற்படி இரத பவனிக்கான முக்கிய அம்சமாக பாதை புணரமைப்புபு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.