சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் தனி ஆளாக சிங்கமாக சீறிய விஜயகாந்த்

99

 

தமிழ் சினிமாவே நேற்றில் இருந்து துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. கேப்டனாக மக்கள் மனதில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இறப்பு செய்தி கேட்டதில் இருந்து மக்கள் அனைவரும் அவரை கடைசியாக பார்க்க வேண்டும் என தவிக்கிறார்கள். சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை அவரது உடல் தீவுத்திடலில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி மேல் தேமுதிக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வைரல் வீடியோ
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் மறைந்த சிவாஜி கணேசன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் தனி ஆளாக சிங்கமாக சீறிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

SHARE