சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாயின் அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்

217

 

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாயின் அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

vicky-and-roshn-720x480

‘எழுக தமிழ்’ பேரணிக்கு பின்னர் வடக்கு முதல்வரை கொலைசெய்ய தென்னிலங்கையில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்பில் திருப்தியில்லாசவிட்டால் இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பிரதிநிதிகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாதென தீர்மானிக்கப்பட்டுள்ளபோதும், அவருக்கு உயிருக்கு ஆபத்து இருக்குமாயின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயாராக உள்ளதென இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் வடக்கு முதல்வரின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் குறிப்பிடவில்லையென இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE